ற்போது ராகு- கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் அடைபட்டுள்ளன. இந்த காலசர்ப்ப தோஷ நிலைக்குள் உலகமே கட்டுண்டு கிடக்கிறது. இரண்டு பாம்புகளுக்கிடையில் மனிதர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டு விழிக்கிறார்கள்.

Advertisment

இப்போதைய நிலையில் சந்திரனின் கோட்சாரம் கவனிக்கத் தக்கது. சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாமலிருப்பது, கேமத்துருவ யோகம் எனப்படும். இது ஒரு விருத்தியில்லாத, பயன்தராத யோகம்.

இந்த பங்குனி மாதத் தில், மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை சந்திரன் மிதுனம், கடகம், சிம்மம் என மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும்போது கேமத்துருவ யோகம் பெறுவார். எனவே, இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். எந்த விஷயமும் சட்டென்று நடந்துவிடாது. கன்னி ராசிக்கு 2-ல் கேது இருப்பது மிக விசேஷம் கிடையாது. அவர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

bb

Advertisment

அடுத்த சித்திரையில் ஏப்ரல் 14-4-2022 முதல் 14-5-2022 வரை சூரியன் மேஷத்திற்கு வந்து விடுவார். அங்கு சூரியன் உச்சம். ஆனால் இந்த வருட உச்ச சூரியன் எந்தவித பயனும் தராது. ஏனெனில் ராகுவுடன் இருப்பதால் கிரகணதோஷம் பெற்றுவிடுவார். அப்போதும் மிதுனம், கடகம், சிம்ம ராசியினர் சற்று கவனமாக இருக்கவேண்டும்.

வைகாசியில் சூரியன் 2022 மே, ஜூன் மாதத்தில் ரிஷபத்திற்கு வந்தவுடன், மிதுன ராசியினருக்கு கேமத்துருவ தோஷம் நீங்கிவிடும். ஆனி மாதம் கடக ராசிக்கும் இந்த தோஷம் நீங்கிவிடும்.

ஆடி மாதம் இந்த கேமத்துருவ தோஷம் முழுமையாக நீங்கிவிடும்.

கேமத்துருவ யோகம் நடக்கும்போது, மூளை சற்று குழம்பும். புத்தி சாலித்தனம் குறையும். முக்கியமான விஷயம், யாருடைய உதவியும் சட்டென்று கிடைக்காது. கெட்ட சகவாசம் ஏற்படும். அதனால் கூடியமட்டும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மேற்கண்ட மாதங்களில் பிறரை நம்பி, அல்லது மற்றவரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டாம். சரியோ, தவறோ- தன் கையே தனக்குதவி என்று செயலாற்றுங்கள்.

இந்த மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், சிசேரியனுக்குரிய தேதி குறித்துக் கொடுக்கும்போது, சந்திரனுக்கு முன்னோ பின்னோ லக்னம் விழுமாறு நேரம் குறிக்கவேண்டும். அப்போது குழந்தைகள் காலசர்ப்ப தோஷம், கேமத்துருவ தோஷம் என இரண்டிலிருந்தும் தப்பிவிடுவார்.

வளர்பிறை ஏகாதசியில் கிருஷ்ணருக்கு அவல் பாயசம் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்யவும்.

குற்றாலநாதர் பின்புறமுள்ள சந்திரன் சந்நிதிக்கும் குற்றாலநாதருக்கும் வெண்ணிறப் பூக்களால் அர்ச்சனை செய்து தீபமேற்றவும்.

செல்: 94449 61845